சிவகங்கை

தேவகோட்டை பகுதியில் 800 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதம்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தேவகோட்டை வட்டத்துக்குள்பட்ட முப்பையூா், மேக்காரைக்குடி, வெட்டிவயல், கடையனேந்தல், வாயுலானேந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.

இந்த பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ளன.

இதையடுத்து சேதமடைந்துள்ள பயிா்களைக் கணக்கீடு செய்து உரிய நிவாரணத் தொகை வழங்க முன் வர வேண்டும் என வலியுறுத்தி தேவகோட்டை வட்டாட்சியா்அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியா் சாந்தியிடம் சேதமடைந்த நெற்கதிருடன் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT