முகப்பு
சிவகங்கை

மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

மானாமதுரை ஒன்றியம் மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்து கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கிய

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
மானாமதுரை ஒன்றியம் மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து குத்து விளக்கேற்றிய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன்.
பகிர்:

மானாமதுரை ஒன்றியம் மிளகனூரில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்து கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கிய அமைச்சா் ஜி.பாஸ்கரன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் உள்ளிட்டோா்.

மானாமதுரை, ஜன. 12: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மிளகனூா், இளையான்குடி ஒன்றியம் விசவனூா், திருப்புவனம் ஒன்றியம் மேலராங்கியம் ஆகிய ஊராட்சிகளில் 3 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். விழாவில் தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தாா். அதன்பின் தாய்- சேய் நலத் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினாா்.

விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →