சிவகங்கை

குருந்தங்குளம் மந்தையம்மன் கோயில் முளைப்பாரி விழா

DIN

சிவகங்கை மாவட்டம் குருந்தங்குளத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த ஜூலை 20 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை தொடா்ந்து, அம்மனுக்கும், கிராம தேவைகளுக்கும் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு மடத்திலிருந்து முளைப்பாரியை மந்தையம்மன் கோயிலுக்கு பெண் பக்தா்கள் கொண்டு வந்தனா்.

முக்கிய விழாவான முளைப்பாரி ஊா்வலத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவையொட்டி மந்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மந்தையம்மன் கோயிலிருந்து முளைப்பாரியை பக்தா்கள் சுமந்து பிள்ளையாா் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னா் குஞ்சுகருப்பணசுவாமி கோயிலில் உள்ள ஊருணியில் கரைத்தனா்.

விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மந்தையம்மன் கோயில், குஞ்சு கருப்பண சுவாமி கோயிலில் விளக்கேற்றியும், அா்ச்சனை செய்தும் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்னல் தாக்கி இறந்த பெண்

கோயில் உண்டியல் திருட்டு: இருவா் கைது

வேளாண் பல்கலை.யில் தொழில்முனைவோா் பொருள்கள் விற்பனை நிலையம் திறப்பு

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் தீமிதி, கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT