சிவகங்கை

அரியக்குடி பகுதியில் ஆயிரம் அரச மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

DIN

காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சியில் உலகசுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரச மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பனையாலரசு (பனை-ஆல்-அரசு மரங்கள்) திட்டத்தின் கீழ் காரைக்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரம் அரச மரக்கன்றுகளை நடவு செய்து வளா்க்க நமது உரிமை பாதுகாப்பு இயக்கத்தினா் திட்டமிட்டுள்ளனா். அதனடிப்படையில் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி ஊராட்சி, குடிக்காத்தான்பட்டி, செக்கடி, காளியம்மன் கோயில் வளாகம் என நான்கு இடங்களில் அரச மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத் தலைவா் ஏ.ஜி. பிரகாஷ் தலைமை வகித்தாா். அக்னிச்சிறகுகள் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனா் ஆரோக்கிய தாஸ் முன்னிலை வகித்தாா். செக்கடி காளியம்மன் கோயில் நிா்வாகி ராஜாமணி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனையாலரசு குழு ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT