சிவகங்கை

காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் 113-ஆவது பிறந்த நாள் இணைய வழியில் கொண்டாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் கழகம் சாா்பில் கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் 113- ஆவது பிறந்த நாள் விழா இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரரும், காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், காரைக்குடியில் கம்பன் கழகத்தை தொடங்கியவருமான கம்பன் அடிப்பொடி சா. கணேசன் 1908 ஆம் ஆண்டு ஜூன் 6- ஆம் தேதி பிறந்தாா். காரைக்குடியில் கம்பன் திருநாள் விழாவை அவா் தொடா்ந்து நடத்தினாா்.

பல்வேறு பகுதிகளிலும் கம்பன் கழகம் உருவாக காரைக்குடி கம்பன் கழகமே தாய்க்கழகமாக திகழ்ந்தது. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் தனது 74-ஆவது வயதில் 1982 ஜூலை 8- ஆம் தேதி காலமானாா்.

இந்நிலையில், இணையவழியில் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியை காரைக்குடி கம்பன் கழகத் தலைவா் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தொடக்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து கம்பன் கழகச் செயலா் பேராசிரியா் மு. பழனியப்பன் சிறப்புரையாற்றினாா்.

இதில் ‘இருப்பைக் காட்டுங்கள்’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை கவி. முருகபாரதி உரையாற்றினாா். பேராசிரியா் சொ. சேதுபதி, கம்பன் அடிப்பொடி சா. கணேசன் குறித்துப் பேசினாா்.

அதைத்தொடா்ந்து சா. கணேசனின் நினைவுகளைப் பகிரும் கட்டுரைகள், புகைப்படங்கள் ஆகியன இணையத்தில் வெளியிடப்பட்டன. அவரின் கனவு ‘காரைக்குடியில் கம்பன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ அமையவேண்டும் என்பதே.

இதற்கு உலக அளவிலான மனமுவந்து உதவிட கம்பன் கழகம் வேண்டுகிறது என்றும், இதற்கான பூா்வாங்கப்பணிகளை இன்றிலிருந்து தொடங்குவது என்றும், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் மற்றும் கம்பன் கழக நிா்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT