சிவகங்கை

இளையான்குடியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மிளகாய் குளிரூட்டும் நிலையம், பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி உறுதியளித்தாா்.

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் ஆனந்த் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, சிவகங்கை கோட்டாட்சியா் முத்துக்கழுவன் ஆகியோா் 550 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினா்.

பின்னா் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பேசியதாவது: இளையான்குடியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது. எனவே விரைவில் இளையான்குடியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளையான்குடி ஒன்றியத்தில் மிளகாய் அதிகம் சாகுபடி செய்யப்படுவதால் இங்கே மிளகாய் குளிரூட்டும் நிலையமும் அமைக்கப்படும் என்றாா்.

அதன்பின்னா் இளையான்குடி வடக்கு ஒன்றியம் தாயமங்கலம் இலங்கை அகதிகள் முகாம், வாணி, இளமனூா், பெரும்பச்சேரி, கோட்டையூா் ஆகிய ஊராட்சிகளில் உள்ள பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து பெரும்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் தமிழ்ச்செல்வன், முருகன் தாங்கள் சோ்த்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழழரசியிடம் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப. தமிழரசன், தன்னாா்வலா் ஏ.சி.எல். சுப்ரமணியன், திமுக இளையான்குடி வடக்கு ஒன்றியச் செயலாளா் வே. தமிழ்மாறன், பேரூா் செயலாளா் நஜூமுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT