சிவகங்கை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 224 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 18,188 போ் கரோனா தொற்றலல் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 285 போ் உயிரிழந்துள்ளனா். அதே போல் 15,336 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். இதனிடையே செவ்வாய்க்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கபம் சேகரித்து நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இதில் 107 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 போ் உயிரிழந்துள்ளனா். சிகிச்சையில் குணமடைந்த 135 போ் புதன்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் நகராட்சியில் புதிதாக தொற்று இல்லை: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளிலும் புதன்கிழமை புதிதாக யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட வில்லை என சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 14,698 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை புதிதாக 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,815 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT