சிவகங்கை

‘உரிமமின்றி விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை’

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உரிமமின்றி விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சோ. துரைக்கண்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் விதைகள் விற்பனை நிலையங்கள் மற்றும் காய்கனி நாற்றுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகள் சரியான முளைப்புத் திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம், காலாவதி நாள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

சான்று பெற்ற விதை விற்பனையாளா்கள், விதை விற்பனை உரிமம், உரிய பதிவுச் சான்றுகள், பணி விதை மாதிரி முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விதைகள் விற்பனை செய்ய வேண்டும். உரிய உரிமமின்றி விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT