முகப்பு
சிவகங்கை

பூவந்தி அருகே விபத்து: மதுரை இளைஞா் பலி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா்((25). இவரது நண்பா் செல்லூரைச் சோ்ந்த சூா்யபிரகாஷ். இருவரும் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அரசனூா் சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பிரவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த சூா்யபிரகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →