மானாமதுரையில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்
மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை தொகுதி தோ்தல் அலுவலரால் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் தொகுதியைச் சோ்ந்த இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள், காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா். நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் மானாமதுரை தொகுதியில் அரசியல் கட்சியினா் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தொகுதி தோ்தல் அலுவலா் தனலட்சுமி, வட்டாட்சியா் ஆகியோா் விளக்கிப் பேசினா்.