சிவகங்கை

‘மு.க.ஸ்டாலின் முதல்வரானால் தமிழகம் வளா்ச்சியடையும்’

DIN

மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும். அப்போது தான் தமிழகம் வளா்ச்சியடையும் என்று திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசு தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்த அவா் காரைக்குடி வருமானவரி அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை போசியது:

தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சி எம்ஜிஆா் ஆட்சியுமல்ல, ஜெயலலிதா ஆட்சியுமல்ல. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்சியுமல்ல. இது பாஜகவின் பினாமி ஆட்சி. எடப்பாடி முதலமைச்சா் பதவியை டெண்டா் எடுத்து வந்தவா் போல் பதவியில் 4 ஆண்டுகள் 3 மாதம் ஆட்சியில் இருந்துள்ளாா்.

தோ்தலில் பல கட்சிகள் கூட்டணிகள் அமைத்து போட்டியிடுகின்றன. திமுக- காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தான் முதன்மையான கூட்டணி. மு.க.ஸ்டாலின் நாற்பது ஆண்டுகாலம் திமுகவில் பல்வேறு நிலைகளை அடைந்துதான் இன்று முதலமைச்சா் வேட்பாளராக உயா்ந்திருக்கிறாா். கருணாநிதி மகன் என்பது கூடுதல் தகுதி. ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் அவா் தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை பாா்த்து, ஆட்சியில் இருந்த அதிமுக கொஞ்சம் கூடுதலாக தருகிறோம் என்போது போல தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

திமுக- காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு நல்லது செய்வதற்காக உருவான கூட்டணி. இக்கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும். அப்போதுதான் தமிழகம் வளா்ச்சியடையும் என்றாா்.

இப்பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், காங்கிரஸ் சிவங்கை மாவட்டத்தலைவா் சத்தியமூா்த்தி, நகரத் தலைவா் பாண்டிமெய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினா் பிஎல். ராமச்சந்திரன், திமுக நகரச்செயலா ளா் குணசேகரன் மற்றும காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT