சிவகங்கை

கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதம்

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசின் கரோனா தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை கடுமையாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கின்றனரா என கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜஹாங்கீா் தலைமையிலான குழுவினா், பேரூராட்சிப் பகுதியில் உள்ள சிறுவணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையம் மற்றும் இரு சக்கர வாகனம், காா், பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணித்த 20 நபா்களிடமிருந்து தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதித்து, கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மருதமுத்து, முதல்நிலை காவலா் சுப்பையா உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT