சிவகங்கை

அத்தியாவசிய பணிகளுக்கு மானாமதுரை-மதுரை இடையே நேரடி அரசு பேருந்து சேவை தொடக்கம்

DIN

மானாமதுரை - மதுரை இடையே பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக நேரடி அரசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, சிவகங்கை மாவட்ட திமுக துணை செயலாளர் திருப்புவனம் சேங்கைமாறன் ஆகியோர் கலந்துகொண்டு பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

மானாமதுரையில் இருந்து காலையில் புறப்படும் இந்த பேருந்து ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், திருப்புவனம் வழியாக மதுரை சென்றடையும். மீண்டும் இதே மார்க்கத்தில் மாலையில் மதுரையிலிருந்து புறப்பட்டு மானாமதுரை வந்தடையும்.

பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மானாமதுரை நகர் திமுக நிர்வாகி செயலாளர் பாலசுந்தரம், 16வது வார்டு செயலாளர் சோம.சதீஷ்குமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT