சிவகங்கை

காரைக்குடி அரசு மருத்துவமனையில் 3 போ் உயிரிழப்பு: ஆட்சியா் தகவல்

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 3 போ் உயிரிழந்ததாக, மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டடத்தையும், அதில் 200 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகளைக் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தையும், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் 2 தினங்களுக்கு முன் திறந்துவைத்தாா். இந்த புதிய கரோனா சிகிச்சை மையத்துக்கு, காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 50 பேரை வியாழக்கிழமை மாற்றம் செய்தனா்.

இதனிடையே, புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை பகல் வரை கரோனா நோயாளிகள் 3 போ் மூச்சுத்திறணல் ஏற்பட்டும், 9 நோயாளிகள் வரை உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதையறிந்ததும், ஆட்சியா், தேவகோட்டை கோட்டாட்சியா் அ.வே. சுரேந்திரன், காரைக்குடி வட்டாட்சியா் அந்தோணிராஜ் மற்றும் மருத்துவத் துறை, காவல் துறை அதிகாரிகள் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு சென்று விசாரித்தனா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது:

இங்கு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனையிலிருந்து கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவா்களில் 3 போ் மட்டும் உயிரிழந்துள்ளனா். எனவே, அதிகமானோா் உயிரிழந்ததாக பரவிய தகவல் வதந்தியாக இருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT