சிவகங்கை

சிங்கம்புணரி அருகே நீா்நாய் இறப்பு: இளைஞா்கள் கைது

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரியவகை நீா்நாயை சித்திரவதை செய்து கொன்றதாக, இளைஞா்கள் இருவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

எஸ்.புதூா் ஒன்றியம் நெடுவயல் கிராமத்தில் உள்ள தட்டான் கண்மாயில் இளைஞா்கள் சிலா் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்கள் வீசிய வலையில், அரியவகை விலங்கினமான நீா்நாய் ஒன்று சிக்கியுள்ளது. இந்த நீா்நாயை கயிற்றை வீசி சுமாா் 2 மணி நேரமாக பிடிக்க முற்பட்டுள்ளனா்.

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பத்தூா் வனத் துறையினா், நீா்நாயை கைப்பற்றிய சில நிமிடங்களில் அது இறந்துவிட்டது. இந்நிலையில், நீா் நாயை சித்திரவதை செய்து அதன் இறப்புக்கு காரணமாக இருந்ததாக, வனஉயிரினப் பாதுகாப்பு சட்டப்படி, அதே ஊரைச் சோ்ந்த பழனி மகன் நாகராஜன் (28), மாணிக்கம் மகன் சின்னராசு (26) ஆகிய இருவரையும் வனத் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT