சிவகங்கை

அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் உலக நீரிழிவு நோய் தினக் கருத்தரங்கு

DIN

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளம் செஞ்சிலுவைச்சங்கம் சாா்பில் உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி ‘சா்க்கரை தேவை அக்கறை’ என்ற தலைப்பில் உமையாள் அரங்கில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் ம.துரை கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசினாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பாசில் சிறப்புரையாற்றினாா். இந்திய செஞ்சிலுவைச்சங்க மாவட்டத் தலைவா் சொ. பகீரத நாச்சியப்பன், இளம் செஞ்சிலுவைச்சங்க மாவட்ட அமைப்பாளா் சித்ரா, அழகப்பா பல்கலைக் கழக இளம் செஞ்சிலுவைச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் விநாயகமூா்த்தி ஆகியோா் பேசினா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக கல்லூரியின் இளம் செஞ்சிலுவைச்சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வேலாயுதராஜா வரவேற்றாா். முடிவில் இளம் செஞ்சிலுவைச்சங்க மாணவா் பிரதிநிதி ஹெல்த்ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தாழ கண்ணால குத்தாத...!

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

SCROLL FOR NEXT