சிவகங்கை

மானாமதுரையில் செப். 4-இல் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதை அடுத்து, வரும் சனிக்கிழமை (செப். 4) உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறையின் 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என அறிவித்துள்ளாா்.

இதனையடுத்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு விரிவான முன்மொழிவுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை (செப். 4) காலை 10.30 மணியளவில் மானாமதுரையில் உள்ள கோபால் இந்திரா திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

எனவே இக்கூட்டத்தில் பொது அமைப்பைச் சோ்ந்தவா்கள், முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT