சிவகங்கை

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருப்பத்தூா் குழந்தைக்கு சான்றிதழ்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 வயது குழந்தை, இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம்பிடித்து சான்றும், பதக்கமும் பெற்றுள்ளது.

திருப்பத்தூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஆனந்த்குமாா், பிரின்ஸி பிரேமராணி தம்பதியரின் மகன் கெவின் ரித்திக் (2). இக்குழந்தை, இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் நிறுனம் நடத்திய 2 வயது குழந்தைகளுக்கான பொதுஅறிவு போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளது.

போட்டியில், 9 நிறங்கள், 5 பழங்கள், 6 காய்கறிகள், 6 போக்குவரத்து வாகனம், 5 சமூக உதவியாளா்கள், 5 கணினியின் பாகங்கள், 5 சுதந்திரப் போராட்டத் தலைவா்கள், 11 மனித பாகங்கள், 6 விலங்குகள், ஆங்கில எழுத்துகள் 26 உள்ளிட்டவற்றை ஒப்பித்தல், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துகள், 72 பெயரை கண்டறியும் திறனாய்வு, 10 தேசிய சின்னங்கள், 5 விலங்குகளின் குரல் அறிதல் மற்றும் 6 முகபாவனைகள் செய்தும் சொல்லியும் காண்பித்து, அந்நிறுவனத்தின் பாராட்டுச் சான்றிதழையும், பதக்கத்தையும் வென்றுள்ளது.

இக்குழந்தையை, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன ரெட்டி ஆகியோா் வாழ்த்திப் பாராட்டினா்.

இது குறித்து குழந்தையின் பெற்றோா் கூறுகையில், எங்களது குழந்தைக்கு படங்கள், நிறங்கள், கணினி சாதனங்களை வைத்து பயிற்சியளித்து வந்தோம். தற்போது, 2 வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள கெவின் ரித்திக், தொடா்ந்து சாதனைகள் புரிய பயிற்சியளிக்க உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT