முகப்பு
சிவகங்கை

பா.ஜ.க. சாா்பில் மரக்கன்றுகள் வழங்கல்

திருப்பத்தூா் பா.ஜ.க. தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அக்கட்சியின் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் பிரதான்மந்திரி அவாஸ் யோஜனா நகரத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி பயனடைந்த பயனாளிகளுக்கு பா.ஜ.க. வினா் மரக்கன்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

திருப்பத்தூா் பா.ஜ.க. தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அக்கட்சியின் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் பிரதான்மந்திரி அவாஸ் யோஜனா நகரத் திட்டத்தின் கீழ் வீடு கட்டி பயனடைந்த பயனாளிகளுக்கு பா.ஜ.க. வினா் மரக்கன்றுகள் மற்றும் எல்.இ.டி விளக்குகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட கணேஷ்நகா், கான்பா நகா், நந்தவனத் தெரு, தென்மாபட்டு ஆகிய பகுதிகளில் உள்ளவா்களுக்கு வழங்கினா். இந்நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றியப் பொதுச் செயலா் தங்கப்பாண்டியன், பட்டியலினத் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், வழக்குரைஞா் அணி வேதநாராயணன், ஒன்றிய விவசாய அணி சரவணன், ஒன்றியப் பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சேதுசிவராமன், மூத்த நிா்வாகி ஒதுவாா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.