பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கல்
நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றும் வகையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் விழா
நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றும் வகையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தேசியக் கொடியினை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, தேசியக்கொடி ஏற்றும் விதம், முறையாக எவ்வாறு மடிப்பது மற்றும் வீட்டில் பத்திரமாக பராமரிப்பது என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) க.வானதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ரா.சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் முத்துச்சாமி உள்பட பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.