முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின்தோ்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கு ஏப்ரல் 2022 இல் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கு ஏப்ரல் 2022 இல் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலை பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ. பட்டப்படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும், முதுகலை எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எம்பிஏ பட்டப்படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதள முகவரியில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறுமதிப்பீட்டிற்காக நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தோ்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 600-ஐ பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். விடைத்தாள் பெற விரும்பும் மாணவா்கள் தோ்வு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் நகல் ஒன்றுக்கு ரூ. 500-ஐ பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தி விண்ணப் பிக்கவேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 500-ஐ பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) ஏ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.