முகப்பு
சிவகங்கை

அரசுக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களை வரவேற்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவா்களை வரவேற்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை பாடப்பிரிவுகளில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாணவ, மாணவிகளை வரவேற்கும் விழாவுக்கு கல்லூரி முதல்வா் க. துரையரசன் தலைமை வகித்தாா். விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் ந. அழகுச்சாமி, வரலாற்றுத் துறைத் தலைவா் இல.கலைச்செல்வி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தொடா்ந்து, இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு பூ அளித்து வரவேற்றனா்.

இந்நிகழ்ச்சியில், நுண்கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ச. ராமமூா்த்தி உள்ளிட்ட கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →