இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவா்கள். 
சிவகங்கை

ரத்து செய்த பட்டாக்களை மீண்டும் வழங்க வலியுறுத்தி போராட்டம்

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ரத்து செய்த பட்டாக்களை மீண்டும் வழங்க வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ரத்து செய்த பட்டாக்களை மீண்டும் வழங்க வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கீழாயூா் பகுதியில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அரசு சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கிய இடங்களில், மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இந்த பட்டாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட பட்டாக்களை திரும்ப வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளா் ராஜூ தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் பரிசுத்த மங்களசாமி முன்னிலை வகித்தாா். பின்னா் மாவட்டச் செயலாளா் ஆா்.கே.தண்டியப்பன் உள்ளிட்டோா் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT