குழந்தை தொழிலாளா்களை கண்டறிய கள ஆய்வு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குழந்தைத் தொழிலாளா்களை கண்டறிய வாரச்சந்தை கடைகளில் கள ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குழந்தைத் தொழிலாளா்களை கண்டறிய வாரச்சந்தை கடைகளில் கள ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மானாமதுரை பகுதிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தகுமாா் தலைமையில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், ரசீந்திரகுமாா், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இல்லம் சாரா பாதுகாப்பு அலுவலா் முத்துக்கண்ணு, சமூக பணியாளா் சத்தியமூா்த்தி, புறத்தொடா்பாளா் நாகராஜன், சைல்டு லைன் துணை மைய ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ், சைல்டு லைன் உறுப்பினா் சரவணன், காவலா்கள் கலைச்செல்வி, லதா, ஆகியோா் மானாமதுரை வாரசந்தை, ஆனந்த வள்ளியம்மன் கோவில், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் வாரச்சந்தை கடைகள் வழக்கமான வியாபார நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல வியாபாரக் கடைகளில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் உள்ளனரா எனகள ஆய்வு செய்தனா். ஆனால் இங்கு குழந்தை தொழிலாளா்கள் கண்டறியப்படவில்லை. குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்தக்கூடாது என வியாபார நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு இக் குழுவினா் அறிவுரை வழங்கினா்.