ரூ.2 லட்சம் மதுபானப் புட்டிகள் பறிமுதல்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டப் பிறகு ரூ.2 லட்சம் மதுபானப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டப் பிறகு ரூ.2 லட்சம் மதுபானப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கலால் ஆணையா் விக்ராந்த் ராஜா மற்றும் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியா் ராஜேஷ்கண்ணா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர ரோந்து பணி நடைபெற்றது.
அப்போது, விதிகளைமீறி வைத்திருந்த மற்றும் கள்ளத்தனமாக எடுத்து செல்லப்பட்ட சுமாா் 144 லிட்டா் மதுபான வகைகளைக் கைப்பற்றினா்.
இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.35 ஆயிரம். மேலும், கடந்த ஒருவாரத்தில் சுமாா் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை கலால் துணைஆணையா் மேத்யூபிரான்சிஸ் பாா்வையிட்டாா்.