முகப்பு
சிவகங்கை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி

 சிவகங்கை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள், நாட்டரசன்கோட்டை, இளையான்குடி, கானாடுகாத்தான், கண்டனூா், கோட்டையூா், நெற்குப்பை, பள்ளத்தூா், புதுவயல், சிங்கம்புணரி, திருப்புவனம், திருப்பத்தூா் என 11 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 285 நகா்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு வரும் பிப். 19 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜன. 28- இல் தொடங்கியது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் பணி கடந்த சில தினங்களாக மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்வது வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. வேட்பு மனு பரிசீலனை சனிக்கிழமையும் (பிப். 5), வேட்பு மனுவை திரும்பப் பெற திங்கள்கிழமையும் (பிப். 7) கடைசி என மாநில தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →