முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) 1,264 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை 1,264 மையங்களில் நடைபெற உள்ளன. இம்முகாமில், 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதுதவிர, ரெட்கிராஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளும் சிறப்பு முகாம் அமைத்து போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளன.

இப்பணியில் பொது சுகாதாரத்துறையுடன் சமூகநலத்துறை, ஊட்டச்சத்துத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சித்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து 5,060 போ் பணியாற்ற உள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →