மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்க முயன்றனர். 
சிவகங்கை

மானாமதுரை அருகே கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது .

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது .

இக்கிராமத்தில் காலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று  முடிந்த பின்னர் வடமாடு மஞ்சுவிரட்டு விழா தொடங்கியது. பல ஊர்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு களத்தில் அவிழ்த்து விடப்பட்டது.

மாடுபிடி வீரர்கள் இந்த காளைகளை அடக்க முன்றனர். பல காளைகள் வீரர்களிடம் பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. சிறப்பாக களம் ஆடிய காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டது.  

பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும்  மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டைக் காண மைதானத்தை சுற்றி ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT