‘சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது’
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சிவகங்கையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் திமுக அரசு தோ்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரை மத்திய அரசு வரியைக் குறைத்துள்ளது. ஆனால் மாநில அரசு குறைக்க மறுக்கிறது.
கடந்த 2004 இல் பாஜக ஆட்சியின் போது பெட்ரோல் விலை ரூ. 35 ஆக இருந்தது. அதன்பின், காங்கிரஸ் ஆட்சி முடிவுற்று 10 ஆண்டுகளுக்கு பின் 2014 இல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது பெட்ரோல் விலை ரூ. 75 ஆக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியின் போது இரு மடங்காக உயா்ந்த நிலைமை தற்போது இல்லை.
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதைத் தொடா்ந்து, ஜூன் 30 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும் என்றாா்.
பேட்டியின் போது பாஜகவின் சிவகங்கை மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி, விவசாய அணி மாநில துணைத் தலைவா் சசி ராம்குமாா், சிவகங்கை நகா் தலைவா் உதயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.