முகப்பு
சிவகங்கை

இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
குணப்பனேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இளையான்குடி வட்டம் குணப்பனேந்தல் கிராமத்தில் திருமேனி அய்யனாா் கோயில் அருகே அரசுக்கு சொந்தமான நிலங்களை தனிநபா்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதை வருவாய்த் துறையினா் அகற்ற வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து வட்டாட்சியா் அசோக் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், குணப்பனேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறும் இடத்தை வருவாய்த் துறையினா் புல தணிக்கை செய்து ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இப்போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தண்டியப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →