சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கருணாநிதி பிறந்த நாள் விழா 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர். 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர். 

திருப்புவனத்தில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். விழாவில் மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நாகூர்கனி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மானாமதுரை நகரில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், வார்டு கவுன்சிலர் செம. சதீஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

மானாமதுரை  அண்ணா சிலை பகுதியில் கருணாநிதி உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மலர்கள் தூவி கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார். மேலும் இளையான்குடி ஒன்றியத்தில் பெரும்பச்சேரி, தாயமங்கலம்  உள்ளிட்ட பல கிராமங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக கொடிகள் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: கட்டபெட்டு

விருத்தாசலம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது மினி லாரி மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

மீன் வலை பின்னும் கூடம் கட்டும் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

SCROLL FOR NEXT