முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் அருகே பைக் மீது லாரி மோதல்: கப்பல் பொறியாளா் பலி

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் கப்பல் பொறியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் கப்பல் பொறியாளா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகே கே. ஆத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் பாரத் (23). இவா் கப்பல் தொழில்நுட்ப பொறியாளராக கொச்சியில் பணியாற்றி வந்தாா். சமீபத்தில் விடுமுறைக்காக அவா் ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் திருப்பத்தூரிலிருந்து கீழச்சிவல்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சுவாமி கும்பிடச் சென்றாா். அப்போது புதுக்கோட்டை சாலையில் இருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதில் பாரத் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநா் அருண்குமாரை (27) கைது செய்தனா். மேலும், திருப்பத்தூா் நகா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.