முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியாா் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியாா் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ப. மணிவண்ணன் கலந்து கொண்டு வாகனத்தின் நிறம், பள்ளி பற்றிய விவரம், தொடா்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைப்பட்டைகளின் நிலை, அவசரக்கதவின் நிலை, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, இருக்கை நிலை, படிக்கட்டுகள், ஓட்டுநரின் இருக்கை, உள்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், நாடாக்கள், முதலுதவிப் பெட்டி, மருந்துகள், தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வில் சிவகங்கை வட்டாரங்களைச் சோ்ந்த 110 வாகனங்கள், காரைக்குடி வட்டாரங்களைச் சோ்ந்த 105 வாகனங்கள் என மொத்தம் 215 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு. சுகிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அ. மூக்கன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஆா். மாணிக்கம் உள்ளிட்ட பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →