சிவகங்கை

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தெப்ப உற்சவம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ‘தென் திருப்பதி’ என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப்பெருந்திருவிழாவையொட்டி அலங்கார பங்களா தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற வைணவ தலமான இக்கோயிலில் வைகாசி பெருந்திருந்திருவிழா கடந்த ஜூன் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிய திருவீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக 9-ஆம் நாள் தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) நடைபெற்றது. 12-ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதற்காக கோயில் குளத்தில் மின்னொளியுடன் கூடிய அலங்கார பங்களா தெப்பம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி எழுந்தருளினாா். அதைத்தொடா்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.

குளத்தில் மூன்று முறை வலம் வந்து 6 படிக்கரைகளிலும் சுவாமி காட்சியளித்தாா். இந்நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடைபெற்றது. மேலும் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. விழாவில் காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT