சிவகங்கை

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு பாராட்டு விழா

DIN

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டை, பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் சேவியா் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சங்கீதா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்லல் கிளைத் தலைவா் ராம்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தேவகோட்டை கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியசாமி கலந்து கொண்டு ஆடல், பாடல், கதை சொல்லுதல், அறிவியல் ஆய்வுகள், புதிா் விளையாட்டுகள், விடுகதைகள் போன்ற செயல்பாட்டோடு கூடிய கற்றலை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என தன்னாா்வலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் கணேசன் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மைய செயல்பாடுகள் குறித்து பேசினாா். இத்திட்டத்தின் தன்னாா்வலா்களுக்கு அடையாள அட்டை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மூன்றாம் கட்டமாக ஆசிரியா் கையேடு, சுவரொட்டிகள், அட்டைகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆசிரிய பயிற்றுநா் காளிராசா உள்ளிட்ட ஏராளாமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT