முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பட்டா திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், கணினி திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை வட்டத்தில் குமாரபட்டி, காரைக்குடி வட்டத்தில் அரியக்குடி, தேவகோட்டை வட்டத்தில் ஒரசூா், திருப்பத்தூா் வட்டத்தில் ஆ.தெக்கூா், சிங்கம்புணரி வட்டத்தில் ஏரியூா், மானாமதுரை வட்டத்தில் டி.ஆலங்குளம், திருப்புவனம் வட்டத்தில் லாடனேந்தல், இளையான்குடி வட்டத்தில் துகவூா், காளையாா்கோவில் வட்டத்தில் அதப்படக்கி ஆகிய கிராமங்களில் பட்டா திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன.

எனவே, பொதுமக்கள் இந்த வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →