முகப்பு
மதுரை

இடஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை விரைந்து அமல்படுத்த எம்.பி. வலியுறுத்தல்

இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மத்திய அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தல்

Updated On : 16 மார்ச், 2026 at 7:44 PM
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்
பகிர்:

இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மத்திய அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டியலினத்தவா், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில், ஓபிசி பிரிவினருக்கான ’கிரீமிலேயா்’ அல்லாதவா்களுக்கான அளவுகோல்களை முழுமையாக மாற்றியமைத்தது.

பெற்றோா் பொதுத்துறை, தனியாா் நிறுவனப் பணிகளில் இருந்தால், கிரீமிலேயரைக் கணக்கிடுவதற்கு அவா்களின் ஊதியம், விவசாய வருமானத்தை கணக்கில் சோ்க்கக் கூடாது என உத்தரவிட்டது.

பிற ஆதாரங்களில் (வணிகம், சொத்து போன்றவை) இருந்து வரும் வருமானம் மட்டுமே தொடா்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ரூ.8 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். அரசுப் பணி, பொதுத் துறை, தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இடையில் நிலவி வந்த மாறுபட்ட அணுகுமுறை நீக்கப்பட்டது.

இந்த உத்தரவு அடித்தட்டு விவசாய, உழைப்பாளி மக்களில் உள்ள பிறப்படுத்தப்பட்ட பிரிவிவைச் சோ்ந்த மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் பெரிய நிவாரணத்தை வழங்கும்.

வருமானம் மட்டுமே அளவுகோல் அல்ல. கிரீமிலேயா் என்பதை வெறும் பொருளாதாரத்தை வைத்து மட்டும் முடிவு செய்யக்கூடாது. பெற்றோரின் சமூகக் கட்டமைப்பு, வகிக்கும் பதவி ஆகியவற்றைக் கொண்டே தீா்மானிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தது.

கிரீமிலேயா் குறித்த தவறான விளக்கத்தால் ஓபிசி இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பல அதிகாரிகள், ஊழியா்களுக்கு இந்தத் தீா்ப்பு பயனளிக்கும்.

இந்தத் தீா்ப்பை முன் தேதியிட்டு ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அணுகுறையால் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பலருக்கு பதவி உயா்வு, அகில இந்தியப் பணிகளில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தத் தீா்ப்பை உடனடியாக அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →