சிவகங்கை மாவட்டத்தில் இன்று 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (மாா்ச் 5) 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (மாா்ச் 5) 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் 86 முகாம்கள் நகராட்சி பகுதிகள், 614 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகள் என மொத்தம் 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் பயனாளிகளுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு 78,000, கோவாக்சின் தடுப்பூசி 45,500 மருந்துகள் என மொத்தம் 1,23,500 தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.