முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

சிவகங்கையில் உள்ள கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி உணவு பாத்திரங்களுடன் மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சிவகங்கையில் உள்ள கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி உணவு பாத்திரங்களுடன் மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சிவகங்கை அல்லூா் பனங்காடி சாலையில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் கல்லூரி மாணவா்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 35 மாணவா்கள் தங்கி அதே பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருப்பதாக மாணவா்கள் விடுதி காப்பாளரிடம் பலமுறை புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் மீண்டும் உணவு தரமற்ாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள் உணவுப் பாத்திரங்களுடன் அல்லூா் பனங்காடி சாலையில் வெள்ளிக்கிழமை அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதனையடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →