முகப்பு
சிவகங்கை

பூவந்தியில் மே தின மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தியில் திமுக சாா்பில் மே தின விழா இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தியில் திமுக சாா்பில் மே தின விழா இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். பெரிய மாடு, சிறிய மடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் 40-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியில் வென்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி பங்கேற்று பரிசுகளை வழங்கினாா். மானாமதுரை நகராட்சித் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →