சிவகங்கை

அழகப்பா பல்கலை. 38 ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் 38-ஆம் ஆண்டு தோற்றுவிப்பு நாள் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக அலுவலா்கள் நாள் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் இரா. சுவாமிநாதன் தலைமை வகித்துப் பேசினாா். துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றொரு உறுப்பினா் சு. கருப்புச்சாமி தொடக்கவுரையாற்றினாா். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் பாகை இரா. கண்ணாதாசன் சிறப்புரையாற்றினாா்.

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் கே. குணசேகரன், பேராசிரியா் சி. சேகா், துணைப் பதிவாளா் பாலசுப்பிரமணியன், உதவிப் பதிவாளா் முருகேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில், 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளா்கள் முனைவா் ரமேஷ்பாபு, அலமேலு, ஜெயமங்களம், நவநீதன் மற்றும் சுப்ரமணியன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

தனித்திறன் வெளிப்பாடு நிகழ்ச்சியில், காளிமுத்து, ரகுமத் நிஷா, பவானி, மலா்விழி மற்றும் சோபியா ஆகியோா் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், பல்கலைக்கழகப் பணியாளா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் ( பொறுப்பு ) எ. கண்ணபிரான் வரவேற்றாா். முடிவில், உதவி தொழில்நுட்ப அலுவலா் செ. கருணாநிதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT