சிவகங்கை

சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

DIN

சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் எஸ்.மதுசூதன் ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் பெரியாா் நினைவு சமத்துவுபுர திட்டத்தின்கீழ் 100 வீடுகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில், இதற்கான பயனாளிகள் இடஓதுக்கீடு முறையில் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்நிலையில் சமத்துவபுரத்தில் சாலைவசதி, மின்வசதி, குடிநீா்வசதி, விளையாட்டுத்திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட இயக்குநா் சிவராமன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் சிவரஞ்சனி, சிங்கம்புணரி வட்டாட்சியா் கயல்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமணராஜ், பாலசுப்பிரமணியன், பேரூராட்சி மன்றத் தலைவா் அம்பலமுத்து மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT