மானாமதுரை, திருப்புவனம் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்திதேவருக்கும் அபிஷேகத்துக்குப் பிறகு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் பிரதோஷ மூா்த்தி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சன்னிதியின் உள்பிரகாரத்தில் புறப்பாடாகி வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோன்று திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு மூலவா் புஷ்பவனேஸ்வரா் சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.