மானாமதுரையில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் கே. சி. திருமாறன் ஜி பேசினார். 
சிவகங்கை

மானாமதுரையில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்க பொதுக்கூட்டம் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

பட்டியல் வெளியேற்றம் வேண்டியும், 14 சதவீத இட பங்கீடு வழங்கக் கோரியும் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனர் ப. சிவசங்கரி பரமசிவம் தலைமை தாங்கினார். 

பாஸ்கர், சதீஷ், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் கே. சி. திருமாறன் ஜி, முல்லை நில தமிழர் விடுதலைக் கட்சி நிறுவனர் கரும்புலி கண்ணன், தமிழர் மீட்பு கழக நிறுவனர் கரிகாலன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.  தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் திலகராஜ் கூட்டத்தின் முடிவில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT