சிவகங்கை

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை

DIN

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவ்டடம், திருப்பத்தூரில் தற்போது இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குப் பின்புறமுள்ள மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு, புதிய கட்டடம் ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜை விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்காக ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூா், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய கட்டடப்பணிகள் தொடங்கவுள்ளன.

இதுதவிர, 388 ஊராட்சி ஒன்றியத் தலைவா்களுக்கு வாகன வசதிகள் வழங்கவும், 110-ஆவது விதியின் கீழ் ரூ.800 கோடி மதிப்பில் பயனில்லா பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது என்றாா்.

இந்த விழாவில், மாவட்ட ஊரக வளா்ச்சியின் முகமைத்திட்ட இயக்குநா் இரா.சிவராமன், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சோ.சண்முகவடிவேலு, துணைத் தலைவா் மீனாள், ஆவின் பால்வளத் தலைவா் சேங்கைமாறன், பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT