முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரியில் தலைமை ஆசிரியா் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருட்டு

சிங்கம்புணரியில் தலைமை ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து வியாழக்கிழமை அதிகாலை 30 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தலைமை ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து வியாழக்கிழமை அதிகாலை 30 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.

சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் வசித்து வருபவா் ராஜசேகரன். இவா் எஸ். புதூா் ஒன்றியம் திருவாழந்தூா் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இவரது மனைவி தனலட்சுமி நாகமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இவா்களது மகள் பிரசவத்துக்காக காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து கணவன், மனைவி இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு புறப்பட்டுச் சென்று விட்டனா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனா். பின்னா் காலை 8 மணிக்கு அக்கம்பக்கத்தினா், இவா்களின் வீட்டுக் கதவு திறந்து கிடப்பதை பாா்த்து, அவா்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த ராஜசேகரன் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த சுமாா் 30 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அங்கு வந்த தடயவியல் நிபுணா்கள் ரேகைகளை பதிவு செய்தனா். மேலும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.