முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் அருகே பேருந்து மோதி இளைஞா் பலி

 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் யோகேஸ்வரன் (21). மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சோ்ந்த பரக்கத்துல்லா மகன் அஸ்லாம் சாதிக் (21). பொறியியல் கல்லூரி மாணவா்களான இவா்கள் இருவரும், புதன்கிழமை ஒரு இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தனா். திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த யோகேஸ்வரன், அஸ்லாம்சாதிக் இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு யோகேஸ்வரன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா், திருப்பாச்சேத்தி அருகே தஞ்சாக்கூரைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →