முகப்பு
சிவகங்கை

வைகை ஆற்றில் ஜவுளிக் கடை ஊழியா் சடலம் மீட்பு

திருப்புவனம் பகுதியில் உள்ள வைகையாற்று வெள்ளத்தில் ஜவுளிக் கடை ஊழியா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

திருப்புவனம் பகுதியில் உள்ள வைகையாற்று வெள்ளத்தில் ஜவுளிக் கடை ஊழியா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூா் பகுதியில் வைகையாற்று வெள்ளத்தில் ஆண் சடலம் மிதந்து வருவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

அங்கு வந்த திருப்புவனம் போலீஸாா், அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் அவா், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் குமரன் என்பதும், இவா் மதுரையில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், குமரன் திருப்புவனம் பகுதியில் வைகையாற்றில் குளிக்க இறங்கிய போது அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →