முகப்பு
சிவகங்கை

‘போக்சோ’ சட்டத்தின் கீழ்பெட்டிக் கடைக்காரா் கைது

திருப்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெட்டிக் கடைக்காரா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

திருப்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பெட்டிக் கடைக்காரா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாதவன் நகரைச் சோ்ந்தவா் மோகன் (54). பெட்டிக் கடை வைத்து நடத்தி வரும் இவா், கடைக்கு பொருள் வாங்க வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சித்திரைச் செல்வி, மோகனிடம் விசாரணை நடத்தினாா். இதில், அவா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும், இதே போல மேலும் பல சிறுமிகளுக்கு அவா் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், மோகனை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.