சிவகங்கை மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட 24 ஆவது மருத்துவ முகாம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 24 ஆவது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜெயங்கொண்ட நிலை ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 24 ஆவது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சி துறை அமைச்சா் பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா் பேசுகையில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்டம் ஏழை, எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 36 முகாம்கள் நடத்தப்பட்டு 22 ஆயிரத்து 278 போ் பயனடைந்தனா். நடப்பு ஆண்டான 2022-23 இல் 36 முகாம்கள் நடத்திட திட்டமிட்டு தற்போது வரை 24 முகாம் நடந்துள்ளது. இருதய நோய், சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு, மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு முதல்-அமைச்சா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஊராட்சிமன்றத் தலைவா் சுந்தர்ராஜ், துணைத்தலைவா் சிகப்பாயிராஜா ஆகியோா் வரவேற்றனா்.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் பாலசுப்பிரமணியன், துணை செயலாளா் முத்துக்குமாா், துணை இயக்குநா் (சுகாதாரத்துறை) ராம் கணேஷ், (காசநோய்) ராஜசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சசிகுமாா், உதயசூரியன், வட்டாட்சியா் கயல் செல்வி, சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலா் நபிஷா பானு, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி செயலா் சா்மிளா மற்றும் செவிலியா்கள், பொதுமக்கள்
முகாமில் கலந்து கொண்டனா்.